விஜயதசமி சிறப்பு: நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் முதல் பார்வை வெளியீடு!
நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'மூக்குத்தி அம்மன் 2'-ன் முதல் பார்வை இன்று (அக். 2) விஜயதசமியை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.
நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'மூக்குத்தி அம்மன் 2'-ன் முதல் பார்வை இன்று (அக். 2) விஜயதசமியை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.
சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளால் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 2) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.87,040-க்கு விற்பனையாகிறது.
நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனு ஆகியோர் நான்காவது முறையாக இணையும் அதிரடித் திரைப்படமான 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகிப் பலியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை போத்தனூர் அருகே திருடிய சேவலை டீ-சர்ட்டுக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த ஈரானி கொள்ளையர்கள் 3 பேர் சினிமா பாணியில் கைது; தேசிய அளவில் கைவரிசை காட்டிய கும்பலை மடக்கிய கோவை தனிப்படைக்குக் குவியும் பாராட்டு!
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.
தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.