தமிழ்நாடு

புத்தாண்டில் நல்ல செய்தி: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!

புதிய ஆண்டின் முதல் நாளான இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

புத்தாண்டில் நல்ல செய்தி: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!
Gold Rate
புதிய ஆண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1, 2026), சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டி விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ரூ.960 அதிரடியாகக் குறைந்ததைத் தொடர்ந்து, இன்றும் விலை இறங்கியிருப்பது மக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களில் கணிசமான சரிவு

நேற்று மாலை நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.99,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,480-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.99,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.12,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.256-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,56,000-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டின் தொடக்க நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.