திமுக ஆட்சியின் சாதனைகள் போன்று அதிமுகவுக்கு இருக்கிறதா? என்று முதல்வ்ர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி, ஓபன் சேலஞ்ச் சவால் விட்டிருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மேடையேறி, பதிலளிக்கத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி ஓபன் சேலஞ்ச் சவால் விடுத்துள்ளார்.
இபிஎஸ் எக்ஸ் பதிவு
இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "கள்ளக்குறிச்சியில் மேடையேறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த முதல்வரே.. கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிமுக ஆட்சியில்தான் உருவானது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று.
அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா?
'எங்கு திரும்பினாலும் போராட்டங்கள்'
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, காலரை தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே...
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போகிறீர்களா?
ஓபன் சேலஞ்ச் .. தயாரா?
செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு ஏஐ சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே ஏஐ சந்தாவை 6 மாதத்துக்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.
பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் நிலுவையில் இருக்கிறது. என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?
அதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.

LIVE 24 X 7