K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=50&order=created_at&category_id=3

மீண்டும் மீண்டுமா.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.640 உயர்வு!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ரூ.92,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Heavy Rain: நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரவுடி நாகேந்திரன் மரணம்: இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் பட்டியல் சேகரிப்பு.. போலீசார் தீவிரம்!

ரவுடி நாகேந்திரனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் யார் யார் என்ற பட்டியலைச் சென்னை காவல்துறை சேகரித்து வருகிறது.

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்..காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!

தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் கலைத் திருவிழா: மாணவர்களுடன் ஆசிரியர்களும் நடனம் ஆடி உற்சாகம்!

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

உலக மனநல தினம்.. ஈஷா சார்பில் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி!

உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல்கள்.. தரவுகள் தர மறுக்கும் மைக்ரோசாஃப்ட்!

வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் மெயில் ஐடிகள் குறித்த தரவுகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரமறுப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சிறையில் 30 தமிழர்கள்.. ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

இலங்கை மீனவர்களால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தங்கத்தை போலவே எகிறும் வெள்ளி விலை.. புதிய உச்சம்!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது.

ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு.. இனிப்புக் கொடுத்து கொண்டாடிய எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை.. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு!

கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 57,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்.. மூன்று குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

பட்டுக்கோட்டை அருகே 3 குழந்தைகள் தனது தந்தையால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புலதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலி.. சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தினேஷ் குமார் மரணம் தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிச் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. வெள்ளி கிராமுக்கு ரூ.4 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை இன்று காலை ரூ.1,320 குறைந்த நிலையில், மீண்டும் ரூ.640 அதிகரித்துள்ளது.

கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை.. 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிரம்புக்கு நோபல் பரிசை கொடுங்கள்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தல்!

அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக். 10) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை நிறுத்தி, காஸா ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!

நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.2 கோடி சொத்து மோசடி: பாலவாக்கத்தில் இருவர் கைது - மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

சென்னை பாலவாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், புண்ணியக்கோடி மற்றும் மஹா கணேஷ் ஆகிய இருவரை மத்திய குற்றப் பிரிவு (CCB) போலீஸார் கைது செய்தனர்.

ரூ. 1.75 கோடி வங்கி மோசடி: பெண் பெயரில் கடன் வாங்கிய ஜிம் உரிமையாளர் சீனிவாசன் கைது!

சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று ( அக் 10 ) கடலில் 76 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 3 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.