தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி.. தங்கம் விலை சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் அளித்து இருக்கிறது.

நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி.. தங்கம் விலை சரிவு!
Gold Rate
வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள், வாரத்தின் முதல் நாளான இன்று சற்றே குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

தங்க விலையில் சரிவு

கடந்த சனிக்கிழமை மாலை, ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,800 என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில், இன்று அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 குறைந்து, தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.13,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.1,04,160-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கடந்த வார இறுதியில் ரூ.2,80,000 ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை, இன்று ரூ.4,000 குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.2,76,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.276-க்கு விற்கப்படுகிறது.

தொடர்ந்து விலையேற்றம் கண்டு வந்த நிலையில், இன்று விலை சற்றே குறைந்து இருப்பது, நகை வாங்குவதற்குத் திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.