தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் மீது புகார்
பாபநாசம் அருகே சுந்தரப்பெருமாள் கோவில் சன்னதி தெருவில் வசித்து வருபவர் விஜய் (44). இவர் பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளியியல் துறையில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் படித்து வரும் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் அடிக்கடி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
போக்சோ சட்டத்தில் கைது
ஆசிரியரின் தொல்லைகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியுடன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில், ஆசிரியர் விஜய் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட விஜய், தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், ஆசிரியர் விஜய் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாடம் கற்பிக்கும் ஆசிரியரே இத்தகைய இழிவான செயலில் ஈடுப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7