தமிழ்நாடு

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்துள்ளது.

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரிப்பு!
Gold Rate
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இன்று காலை உயர்விற்குப் பின் மாலை மீண்டும் அதிரடியாக விலையேறியுள்ளது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,680-ம், வெள்ளி கிலோவுக்கு ₹ரூ.6,000-ம் உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தங்கத்தில் இன்று கண்ட இரட்டை உயர்வு

இன்று காலை ரூ.880 உயர்ந்த தங்கம், மாலை நேரத்தில் மேலும் ரூ.800 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.1,04,800 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று பெருமளவில் அதிகரித்துள்ளது. இன்று காலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்த வெள்ளி, மாலையில் மேலும் ரூ.6,000 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,80,000 என்ற அதிர்ச்சியூட்டும் விலையில் விற்கப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வருவது, நகை வாங்கும் திட்டத்தில் இருந்தவர்களைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.