K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=650&order=created_at&category_id=3

உங்க ப்ரஸ்மீட் அப்புறம் தான் கேள்விகள் இன்னும் அதிகமாகுது? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்வார் எனப் பொதுக்குழுவில் தீர்மானம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமகவின் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்ந்து செயல்படுவாரென ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஆளுநர் கம்பு சுற்ற வேண்டும்.. தமிழகத்தில் அல்ல - முதல்வர் சாடல்!

தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 17) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரி சேர்க்கை: இடைத்தரகர்கள் மோசடிகுறித்து சென்னை காவல்துறை எச்சரிக்கை!

மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அமெரிக்கா - இந்தியா வர்த்தகப் போர்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து இந்திய பொருளாதார வர்த்தக நெருக்கடியைச் சமாளிக்க, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

கோவையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி கும்பல் கைது!

கோவை செட்டிபாளையத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் இன்று காலையிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை.. தென் மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், வெயில் தணிந்து இதமான சூழல் ஏற்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீண்ட பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர்.. இல.கணேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கு தெரியுமா?

சென்னை அண்ணாசாலையில் மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

மனைவியுடன் தகராறு.. 2 நாட்களாக தூக்கில் தொங்கிய கணவரின் சடலம் மீட்பு!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடல் 2 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.

நடுவானில் ஏற்பட்ட திடீர் 'எஞ்சின் கோளாறு'.. சென்னையில் அவரசமாகத் தரையிறங்கிய Air Asia விமானம்!

கோலாலம்பூரிலிருந்து கோழிக்கோடு சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா (Air Asia) விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் சென்னை அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் நமிதா மாரிமுத்து.. பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நயினார் நாகேந்திரன்!

பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் சமூக ஆர்வலரான திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகிய இருவரும் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கசிந்தது ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம்: இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவன கூலி திரைப்படம், உலகம் முழுவதும் வெளியான சில மணிநேரங்களிலேயே சட்டவிரோதமாகப் பல்வேறு இணையதளங்களில் கசிந்துள்ளது படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தியாகிகளுக்கு மரியாதை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டது

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- இபிஎஸ், விஜய் வாழ்த்து

நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டம்...வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விமான நிலையம்

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம்- எடப்பாடி பழனிசாமி

கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம

பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்தி விற்ற தாத்தா- பாட்டி கைது!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர்- காரணம் இது தானா?

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக புதியதாக 6 அறிவிப்பு- மனமிறங்குவார்களா போராட்டக் குழு?

பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மருத்துவம் படிக்க சிறப்பு வகுப்புகள்- மலைவாழ் மக்களுக்கு இபிஎஸ் உறுதி

மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு