K U M U D A M   N E W S

தமிழ்நாடு

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனுக்கொடுத்து தூய்மைப் பணியாளர்களின் நூதனப் போராட்டம்: சென்னை வேப்பேரியில் பரபரப்பு!

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு.. நெல்லூரில் பிடிபட்ட ஒடிசா இளைஞர்!

கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சென்ற காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் போத்தீஸ் கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

பிரபலமான போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரலாற்றில் புதிய உச்சம்: தங்கம் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஒரே நாளில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவு: பொக்லைன் ஓட்டுநர் கொடூர கொலை.. நண்பர் கைது!

திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Heavy Rain: கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை: சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!

புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கனகசபை தரிசனம்: தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

ட்ரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை - அமெரிக்கா அரசியலில் பரபரப்பு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், பழமைவாத அரசியல் ஆர்வலருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வங்கி மோசடி வழக்கு: 14 வருடங்களாகத் தேடப்பட்ட குற்றவாளி குவைத்தில் கைது!

சென்னை பாங்க் ஆஃப் பரோடாவில் ₹3.5 கோடி மோசடி செய்துவிட்டு, 14 வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளி முனாவர் கான், சர்வதேச போலீசாரின் உதவியுடன் குவைத் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.

கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!

கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை மின்சார ரயில்: மதுபோதையில் ரகளை - வீடியோ வைரல்!

கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போக்குவரத்து அபராத நிலுவைத்தொகைக்கு புதிய செக்! - இன்சூரன்ஸ் புதுப்பித்தால் மட்டுமே அபராதம் கட்ட முடியும்?

நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிக்கப் புதிய நடைமுறையை செயல்படுத்த, போக்குவரத்து துறைக்குப் பரிந்துரை செய்யக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

கடன் தொல்லை.. நகைக்கடைக்காரர்களை குறிவைத்து தொடர் திருட்டு.. 2 பேர் கைது!

நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரூ.26,000 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம்.. நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்- முதல்வர் ஸ்டாலின்

தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. அபராதம் செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்!

வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

பட்டியலின பெண் தற்கொலை.. காதலனை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டியலின பெண் ஒருவர், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

ஞாபக மறதியால் தவித்த மூதாட்டி: காவல்துறை உதவியால் குடும்பத்துடன் இணைப்பு!

சென்னையின் தெருவில் மீட்கப்பட்ட 80 வயது மூதாட்டி; காவல்துறை உதவியால் உத்திரமேரூர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை: 2 இளைஞர்கள் கைது!

மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.