தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கக் கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில், சென்னை அண்ணாநகர், பூக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ட்ரீம் 11 நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம், புதிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தால் முடிவுக்கு வந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.
டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் 31 அன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட 'தீ ஆணையத்தின் தலைவராக' அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம், 31.08.2025 அன்று நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் ( Medical Shop) கத்தியைக் காட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
"ஜிபேவில் உடனடியாகப் பணம் அனுப்பிவிடுகிறோம்" என்று கூறி, நேரடியாகப் பணம் பெறும் மோசடிக் கும்பல்குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம்குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சமையல் கலைஞராகவும் நடிகராகவும் பரிச்சயமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
“ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்குக்கு தொடர்புடைய நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கோயம்புத்தூரில் கடந்த மூன்று நாட்களாக மின்னஞ்சல்மூலம் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது, அதை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து விழுங்கிய ஊழியருக்கு இனிமா' கொடுத்து நகையை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.