ART Jewellers and Trusted Profit Company தமிழகம் முழுவதும் கிளைகளை நிறுவி, பொதுமக்களிடம் பெருமளவில் பணத்தை வசூலித்து மோசடி செய்ததாகக் கடந்த 2023ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே 11 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் நான்கு நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். புழலைச் சேர்ந்த பானுவள்ளி, அம்பத்தூரைச் சேர்ந்த சுஜாதா, ஆவடியைச் சேர்ந்த திவ்யா, மற்றும் புழலைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மோசடியில் இந்த நான்கு பேரின் பங்கு என்ன, எவ்வளவு மதிப்பிலான பணத்தை மோசடி செய்துள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திய பிறகு, கைது செய்யப்பட்ட நான்கு நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 15ஆக அதிகரித்துள்ளது.
LIVE 24 X 7









