K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=625&order=created_at&category_id=3

Chennai Rains: சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை

சென்னையில் நேற்றுபோலவே இன்றும் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Heavy Rain: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சொல்லியும் கேட்காத பெற்றோர்...எஸ்.ஐ மகளின் முடிவால் விபரீதம்

திருமணம் பிடிக்கவில்லையெனச் சொல்லியும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்திற்கு ஏற்பாடு செய்ததால் மன உளைச்சலில் மகள் எடுத்த விபரீத முடிவு

அனிருத் இசை நிகழ்ச்சிக்கு சிக்கல்- விசிக எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் மனு

கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்குத் தடை கேட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை தவெக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்...பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு வரவேற்பு

மதுரையில் தவெக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.

தவெக மாநாட்டில் அதிமுக குறித்து பேசிய விஜய் - பதிலடி கொடுத்த இபிஎஸ்

திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமேயென விஜய்க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

தவெக மாநாட்டில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்...அதிர்ச்சி அடைந்த விஜய்

மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Rains:சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை – 30 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

சென்னையில் இன்று அதிகாலை முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் காலை 8 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தவெக மதுரை மாநாடு: அம்மாவின் அன்பு முத்தம்.. புதிய எண்ட்ரி சாங்.. ரேம்ப் வாக்கில் விஜய் செல்ஃபி!

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்று வருகிறது. புதிய கொள்கைப் பாடலுடன் மாநாட்டு மேடையில் விஜய் தோன்றினார்.

மதுரை மாநாடு: கொதிக்கும் வெயில் – கலங்கும் தவெக தொண்டர்கள்

மதுரையில் இன்று 2-வது மாநில மாநாட்டில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி – தலைமறைவாக இருந்த பெண் கைது

தலைமறைவாக இருந்த ரம்யாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்துக் கைது செய்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கிற்கு தடையில்லை-சென்னை உயர்நீதிமன்றம்

இபிஎஸ்க்கு எதிராக வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது

விஜய் தனக்கு தம்பியா? எதிரியா? – சீமான் சொன்ன பதில்

விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்; எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள்;அவர்களது அனைவரது நலனுக்காகத்தான் நான் போராடுகிறேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மயக்கமடைந்ததுபோல் நடித்து புரோகிதரிடம் நகைகள் திருட்டு...ரேபிடோ ஓட்டுநரை கைது செய்த போலீஸ்

மயக்கமடைந்தது போல நடித்து புரோகிதரிடம் இருந்து தங்க நகைகளைத் திருடிச் சென்ற ரேபிடோ ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை

தவெக மாநாட்டிற்கு தமிழக அரசு எந்த இடையூறும் செய்யவில்லை- முத்தரசன்

தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

'செக்குல ஆட்டுன சுத்தமான எண்ணெய்’ என கலப்படம்- திமுக பேரூராட்சி தலைவியின் கணவர் ஆலைக்கு சீல்

தமிழக- கேரளா எல்லை பகுதியான பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட பல பகுதிகளில் செக்கு தேங்காய் எண்ணெய் தரமான எண்ணெய் எனக் கூறி பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு... காவல்துறை தகவல்!

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட தகராறு.. கூலி தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்!

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி கத்தரிக்கோலால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்’.. தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்!

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டும் வகையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கல்வி உதவித்தொகை என மோசடி.. வீடியோ கால் மூலம் ரூ.53 ஆயிரம் கொள்ளை!

கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 24 வரை மழை நீடிக்கும்.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்க ப்ரஸ்மீட் அப்புறம் தான் கேள்விகள் இன்னும் அதிகமாகுது? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்வார் எனப் பொதுக்குழுவில் தீர்மானம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமகவின் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்ந்து செயல்படுவாரென ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.