சிஏஜி அறிக்கையின்படி, 2023 நிதியாண்டில் நாட்டின் 12 மாநிலங்கள் வருவாய் குறைவைச் சந்தித்துள்ளன. இதில், ஆந்திரப் பிரதேசம் (ரூ.43,488 கோடி), தமிழகம் (ரூ.36,215 கோடி), ராஜஸ்தான் (ரூ.31,491 கோடி) ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள், நிதி மேலாண்மையில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவது அரசின் நிதி நிலைமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில், வருவாயைப் பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் வலியுறுத்தப்படுகிறது.
LIVE 24 X 7









