K U M U D A M   N E W S

தமிழ்நாடு

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் விஜய்: திருச்சியிலிருந்து 'மக்களுடன் சந்திப்பு'!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கலாம்: மத்திய அரசு அனுமதி!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை மெட்ரோ விரிவாக்கம்: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு!

சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து 2,470 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மிலாது நபி, ஓணம் மற்றும் வார இறுதி விடுமுறைகளை முன்னிட்டு, சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ரூ.4,000 கோடி ஆண்டு வருமானம்: கெமிக்கல் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிரடிச் சோதனை!

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் Archean Chemical Industries Ltd. நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

Heavy Rain Alert: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உயிர் குடிக்கும் தெருநாய்கள்.. துடிதுடிக்கும் குழந்தைகள்: கண்டுகொள்ளாத அரசுகள்!

தமிழகத்தில் தெருநாய்கள் தாக்கி பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் பெற்றோர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு வேதனையுடன் அளித்த நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு;

Moderate Rain: தமிழகத்தில் செப்.9 வரை மிதமான மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா; குடியரசுத் தலைவர் முர்மு, ஆளுநர் ரவி பங்கேற்பு!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில்  45 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிப் பாராட்டினார்.

நீதிமன்றமே முடிவெடுக்கும் என்றால் சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்கு? - சீமான் கேள்வி!

ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றத்தின் தலையீடு குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாடாளுமன்றம், சட்டமன்றம் எதற்கு?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடம்: எதிர்த்துப் போராடிய மாணவர்கள் கைது!

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்ப்பதற்கான யுஜிசி அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற எஸ்.எஃப்.ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம்: கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்!

முதலமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி முதலீடுகளை ஈர்த்து, தனது பயணத்தை விமர்சித்தவர்களுக்குக் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.

அயனாவரத்தில் அதிர்ச்சி: ரூ.500 தகராறில் நண்பரைக் கட்டையால் அடித்துக் கொலை.. ஒருவர் கைது!

₹500 கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நண்பரைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த வழக்கில், அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராசிபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்.. மிளகாய் பொடி தூவி ரூ.50,000 திருட்டு!

ராசிபுரத்தில் லிஃப்ட் தருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பெண், ஓய்வுபெற்ற செவிலியரிடம் மிளகாய் பொடி தூவி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தெருநாய்கள் பிரச்னைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள்'- கமல்ஹாசன் சொன்ன பதில்!

தெரு நாய்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "எல்லா உயிரினங்களையும் முடிந்த அளவுக்குக் காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

காவல்துறையினர் மீது தாக்குதல்: 29 வடமாநில தொழிலாளர்கள் சிறையில் அடைப்பு!

திருவள்ளூர் அருகே காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட 29 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முழு வீச்சில் கோவை மெட்ரோ, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்.. கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ₹65 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: 3 பேர் கைது!

ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட  ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹனி டிராப் கும்பல் சிக்கியது: தொழிலதிபரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது!

சென்னையில் தொழிலதிபர் ஒருவரை 'ஹனி டிராப்' (honey trap) செய்து கடத்தி பணம் பறித்த வழக்கில், ஒரு பெண் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாம்பு கடித்தால் மருந்து தேவையில்லையெனச் சர்ச்சை பேச்சு.. தவெக பிரமுகர் காவல் நிலையத்தில் புகார்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தவெக பிரமுகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

மழைநீர் வடிகால் பள்ளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

சென்னை, சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் 42 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.