முதல்வர் தனது வீடியோவில், தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இரட்டிப்பு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் சராசரியாக 8.9% வளர்ச்சியைப் பெற்றுள்ள நிலையில், இது அ.தி.மு.க. ஆட்சியைவிட இரு மடங்கு அதிகம் என்று அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். குறிப்பாக, 2011-2016 காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் சராசரி வளர்ச்சி 6.7% ஆகவும், 2016-2021 காலகட்டத்தில் 5.2% ஆகவும் இருந்தது என்றும் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.
பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி, வேலைவாய்ப்பிலும் தி.மு.க. சாதனை படைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உற்பத்தித் துறையில் மட்டும் வேலைவாய்ப்புகளை 35 லட்சத்திலிருந்து 73 லட்சமாக உயர்த்தி, அதுவும் இரட்டிப்பு வளர்ச்சியே என அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தங்களுடைய சாதனையைத் தாங்களே முறியடிப்போம் என்றும், இது வெறும் தொடக்கமே என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது, அரசியல் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
LIVE 24 X 7









