காவல் நிலையங்களில் தாக்கலாகும் வழக்குகளின் விசாரணை அறிக்கை மற்றும் இறுதி அறிக்கை ஆகியவற்றை நீதிமன்றங்களில் சமர்ப்பிப்பதில் ஏற்படும் சுணக்கங்களைத் தவிர்க்க, இ-பதிவு சேவை முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிபதி திரு.S.கார்த்திக்கேயன் அவர்கள் இ-பதிவின் இன்றியமையாமை குறித்தும், நீதிமன்றங்களும் காவல்துறையினரும் ஒருங்கிணைந்து வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார்.
இந்த சிறப்புப் பயிற்சிப் பட்டறையில், நீதித்துறை சார்பில் 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி.அருமைசெல்வி, முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் திருமதி.R.கிரிஜாராணி உட்பட பல நீதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீதிபதி திருமதி. அருமைசெல்வி அவர்கள், டிஜிட்டல் காணொளி மூலம் இ-பதிவு செய்யும் முறைகளை காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அலுவல் பணியில் உள்ள காவலர்களுக்கு விளக்கினார். காவல்துறை ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் இ-பதிவு நடைமுறையில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளித்து, அதிகாரிகள் அனைவரும் இந்த புதிய முயற்சியில் சிறப்பாகப் பணியாற்றிட அறிவுறுத்தினார்.
LIVE 24 X 7









