K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=1100&order=created_at&category_id=3

பயிர் கடன் விவகாரம்.. உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'நீங்க அழாதீங்க மேடம்'.. திருநங்கைகளின் பாசத்தால் கண் கலங்கிய கலெக்டர்

குடியிருப்பு, சுயதொழில் என தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் திருநங்கைகள். இதுத்தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பழவேற்காடு அருகே 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை.. துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது!

பழவேற்காடு அருகே நடைபெற்ற ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது, கடல் வழியாக அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 9 பேரும், சாலை வழியாக முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு.. நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படைகள் அமைத்து தேடிவந்த காவல்துறையினர் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூ செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது!

கொடைரோடு அருகே மாவூத்தான் பட்டியில், வீட்டு தோட்டத்தில் உள்ள பூச்செடிகளுக்கிடையே மறைவாக கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயியை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை.. விவசாயிகள் சாலை மறியல்.. அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் அருகே டோல்கேட் பகுதியில் நெல்லுக்கு உரியவிலை கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

"ஒரு நாள் பழக்கத்தால் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன்"- ‘தீங்கிரை’யால் போதைக்கு இரையான நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் வழக்குகளில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கைது என்ற செய்தியை நாம் பிற மாநிலங்களில் நிகழ்ந்ததாக அடிக்கடி பார்த்து இருப்போம், படித்து இருப்போம். ஆனால் முதல் முறையாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைதான செய்தி வைரலாகி உள்ளது. தமிழ் திரை உலகில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக பலரது தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.

பாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேரன்...நாடகமாடியது அம்பலம்

பாட்டியை கொலை செய்து விட்டு கோவிலில் மொட்டை அடித்து கொண்டு மனைவியின் ஊரில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடிவேலு பட பாணியில் தப்பிக்க முயற்சி-படகில் சென்று கைது செய்த போலீஸ்

நாகர்கோவில் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய இளைஞரை பிடிக்க சென்ற போலீசார் தப்பிக்க ஓடி குளத்தில் குதித்து தப்ப முயன்ற இளைஞர் வடிவேல் பட பாணியில் வருவது போல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏடிஎம் மையங்களில் நூதனக் கொள்ளை.. வட மாநில இளைஞரின் புகைப்படம் வெளியீடு..!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் சினிமா பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட வட மாநில நபர் குறித்து பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

புதுமண தம்பதிக்கு நடந்த பெரும் சோகம்...திருச்சியில் பயங்கரம்

வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய புதுமண தம்பதியின் கார் விபத்தில் சிக்கிய மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் வழக்கு – அதிமுக முன்னாள் நிர்வாகியை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட்டா நிலத்தில் பாதை கேட்டு மிரட்டல்.. அமைச்சர் உதவியாளர் மீது விவசாயி புகார்

விருதுநகர் அருகே பட்டா நிலத்தில் பொதுமக்கள் செல்ல பாதை விடக்கோரி நிதியமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் எதிரொலி: சென்னை விமானங்கள் ரத்து

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கால் டாக்ஸி விபத்து: தந்தை, கர்ப்பிணி உயிரிழப்பு-மதுபோதையால் நடந்த சோகம்

சென்னையில் கால் டாக்ஸி விபத்தில் தந்தை மற்றும் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழப்பு. தாய் மற்றும் கார் ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ஸ்ரீகாந்தால் சிக்கும் பிரபலங்கள்...போதைப்பொருள் பயன்படுத்தியது யார் என போலீஸ் விசாரணை

கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கு: திமுக MP ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், குற்றச்சாட்டுப் பதிவும் வழக்கின் விசாரணையும் வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா.. மோகன் பகவத் பங்கேற்பு

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நீரை சேமிக்க வேண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் அழிவிற்கு முன்பு நாம் பல்வேறு முன்னெடுப்புகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. போலீசார் தீவிர விசாரணை!

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தீவிர அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரூம் புக் செய்யும் போது உஷாரா இருங்க... தமிழ்நாடு ஹோட்டல் பெயரில் நூதன மோசடி!

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் பெயரில் போலி இணையதளங்கள் உலாவுவதாகவும், அதனால் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக, தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விவசாய கடன் பெற சிபில் ஸ்கோர்.. உத்தரவை ரத்து செய்ய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

கூட்டுறவு சங்கங்களில் சிபில் பிரச்சனை காரணமாக திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விஜய்யை சந்திக்க த்ரிஷா போல இருக்க வேண்டும்.. நல்லசாமி ஆதங்கம்

தவெக தலைவர் விஜய் யானையில் அமர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க நான் த்ரிஷா, நயன்தாரா போன்று இருக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பீக் ஹவர்சில் தண்ணீர் லாரிகளுக்கு தடை.. காவல்துறை உத்தரவு

காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சோகத்தில் அதிமுக.. வால்பாறை எம்.எல்.ஏ. காலமானார்

வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.