திருப்புவனத்தில் இளைஞர் மரணம்: வழக்குப்பதிந்து கைது செய்க- தவெக வலியுறுத்தல்
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.
அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடை அடைப்பு உள்ளிட்ட அடுத்த சம்பவங்களால் மடப்புரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அதிமுக தேர்தல் பிரசாரம் என்பது மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தியே இருக்கும் என காயத்ரி ரகுராம் பேச்சு
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
காமராஜர் ஆட்சிக்குப் பிறகு அதிக பள்ளிக்கட்டிடங்களை உருவாக்கி வருவது நாங்கள் தான் என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து விமானத்தில் பயணிக்க இருந்த 164 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைப்பு
பேங்கிங் என்ற கோடு வேர்டை பயன்படுத்தி ஹவாலா பணத்தைக் கொண்டு செல்லும் நபரிடம் பணம் பறிக்கும் கும்பல் கைது
தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என வேடசந்தூரில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கெமிக்கல் பாட்டிலை தூக்கிச் சென்ற போது எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்த நிலையில் படுகாயமடைந்த அரசு பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
மது போதையில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பு பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அப்போலோ மருத்துவமனைகள் உலக அவசர மருத்துவ தினத்தை முன்னிட்டு 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'நம்பிக்கையின் அணிவகுப்பிற்கு' ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சென்னையின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் அணிவகுப்பு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
மகளிர் தின நிகழ்வின் போது ஆட்டோ வழங்குமாறு பெண் ஒருவர் வைத்த கோரிக்கையினை 3 மாதத்தில் நிறைவேறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிப்பட்டனர்.
சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த வழக்கில் 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அமேசானில் செல்போன் ஆர்டர் செய்த நிலையில் சென்ட் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை மாற்றி கொடுக்காமல் ஏமாற்றியதாக அமேசான் நிறுவனம் மீது டிஜிபி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.