K U M U D A M   N E W S

தமிழ்நாடு

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கல்லூரி மாணவியை பாதியில் இறக்கிவிட்ட நடத்துநர்....கண்ணீருடன் மாணவி காத்திருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி

கல்லூரி மாணவியை பாதியில் இறக்கி விட்டதை தட்டிக்கேட்ட உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடத்துநர்

பெண்ணின் பெயரில் வீடியோ பதிவு...கம்பி எண்ணும் நீச்சல் பயிற்சியாளர்

சென்னை மருத்துவக்கல்லூரி மாணவி பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பெண்ணின் உடை மாற்றும் வீடியோவை பதிவிட்ட நீச்சல் பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்...இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

மனைவி, குழந்தைகள் இல்லாத நேரம் பார்த்து பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக வெட்டி உள்ளனர்

கணவருடன் பைக்கில் சென்ற மனைவி.. ஆபாச சைகை காட்டிய காவலர் மீது வழக்குப்பதிவு!

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஆபாச செய்கை செய்த விவகாரத்தில் ஓட்டேரி போலீசார், காவலர் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது- எந்த மாவட்டத்தை சார்ந்தவர்கள்?

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் படுகொலை- துப்பாக்கி வழங்க அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் விவசாயிகள் படுகொலை தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், விவசாயிகளின் தற்காப்பிற்கு தமிழ்நாடு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பின்னரே சாதிச்சான்றிதழ்கள் வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

முழுமையான விசாராணைக்கு பிறகே சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வயது முதிர்ந்த தம்பதி படுகொலை - அரசியல் தலைவர்கள் கண்டனம்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி நடைமுறைக்கு விலக்கு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை விலக்கப்பட்டு, 30 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தால் ஃபெயிலாக்கும் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.

மதுரை: ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!

கரிகாலன் ஜல்லிக்கட்டு காளைக்கு 8 வது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினர் அப்பகுதி இளைஞர்கள்.இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. சுவாச குழல் அருகே சிக்கியதால் மூச்சுத்திணறல்

திருமயம் அருகே நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியின் தொண்டையில் 5 ரூபாய் நாணயம் சிக்கியது. சுவாச குழல் அருகே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி இருந்த நாணயத்தை லாவகமாக எடுத்து சாதித்துள்ளனர் திருமயத்தினை சார்ந்த டாக்டர்கள்.

சீமான் தலை துண்டாகும்..வீர வசனம் பேசிய நபர் அதிரடி கைது!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கரும்புக்கான ஆதார விலை உயர்வு.. தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காதா? என்ன காரணம்?

மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

விஜய் வருகை.. கட்டளைக்கு அடங்காத மதுரையன்ஸ்: பொதுச்சொத்து சேதம்

ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய். அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் மதுரை விமான நிலையம் ஸ்தம்பித்தது.

இளம்பெண்கள் தான் டார்கெட்.. Gpay மூலம் போலீசாரிடம் சிக்கிய சிற்றின்ப சைக்கோ

தெருக்களில் நடந்து செல்லும் இளம்பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த "சிற்றின்ப" சைக்கோவினை Gpay மூலம் சாதுர்யமாக கைது செய்துள்ளனர் தமிழக காவல்துறையினர்.

அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள்..விவசாயி எடுத்த விபரீத முடிவு: அரசுக்கு வலுக்கும் கோரிக்கை

தனியார் வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலை வழக்கு.. சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு ஜூன்12ல் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 சாட்சிகள் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சிறையில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள்.. கைதிகளுக்கிடையே கைகலப்பு!

புழல் சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரை காணாமல் போனதால் கைதியை தாக்கிய 7 கைதிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை!

சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உதவியுடன் நாச வேலை தடுப்பு நடவடிக்கை மற்றும் ரோந்து பணியினை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.

கோவை விமான நிலையத்தில் இப்படி ஒரு விஷயமா? ஆச்சரியத்தில் பயணிகள்!

கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் வசதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்லூரி வளாகத்தில் ஆங்கிலேயர்கள் கல்லறை... அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் உள்ள இரு ஆங்கிலேயர்களின் கல்லறைகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ajithkumar Birthday: 54-வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்.. ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் அஜித்குமார் இன்று தன்னுடைய 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் தான் கொண்டாட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா மட்டுமில்லாது தான் கால்பதிக்கும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரலாறு படைத்து வருகிறார் அஜித்குமார்.

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் - தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலை பெயரை மாற்றக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலையை பெரியார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றக் கோரிய வழக்கில் எட்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.