ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜ கணேஷ் என்பவரை செல்வபுரம் போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான சொத்து மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 46 லட்சம் முடக்கப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், வேடப்பட்டியில் உள்ள ஹரிஸ்ரீ கார்டன் பகுதியில் ரூ. 50 லட்சத்திற்கு ஒரு வீட்டுமனையை வாங்கி உள்ளார். இந்த சொத்தை போலீசார் தற்போது முடக்கி உள்ளனர். மேலும், அவரது வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு இருந்த ரூ. 46 லட்சத்தை முடக்குமாறு வங்கிக்கு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
கைது செய்யப்பட்ட ராஜ கணேசிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் சூதாட்டத்திற்கான ஒரு செயலியின் (App) உள்நுழைவு விவரங்களை வைத்து இருந்தது தெரியவந்து உள்ளது. இந்த உள்நுழைவைப் பயன்படுத்தி, மற்றவர்களிடம் பணத்தைப் பெற்று அதை மெய் நிகர் நாணயங்களாக (virtual coins) மாற்றி கொடுத்து உள்ளார். சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டு, மீதிப் பணத்தை கொடுத்து வந்து உள்ளார்.
இதனை அடுத்து செல்வபுரம் காவல் துறையினர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஐபிஎல் சூதாட்டம் குறித்து செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LIVE 24 X 7