மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் மயங்கி விட மாட்டார்கள்- திருமாவளவன்
பாஜகவின் மதவாத அரசியலுக்கு பிற மாநில மக்கள் மயங்கி விடுவதுபோல், தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விடமாட்டார்கள் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து
பாஜகவின் மதவாத அரசியலுக்கு பிற மாநில மக்கள் மயங்கி விடுவதுபோல், தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விடமாட்டார்கள் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து
விஜயும்-காமராஜரும் இணைந்த ஒரு போஸ்டரை தவெக ஆதரவு ஐடி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
கமல்ஹாசன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.
விஜய் கூட்டணியில் இணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது என்றும், இதனால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.
அரசியல் ஆதாயத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று போகாத ஊருக்கு, வழி சொல்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிருப்தி நிர்வாகிகளில் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது அறிவாலய வட்டாரத்தில் ஆனந்தத்தை பொங்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த அதிருப்தி நிர்வாகிகளில் பட்டியல திமுக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது
'தக் லைஃப்' பட விவகாரத்தில் நீதிபதி நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார் என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி பண்பலை 102.1-இல் பகலில் தமிழும், இரவில் ஹிந்தியுமாக ஒலிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தத்தோடு, முழு நேரமும் தமிழில் ஒலிபரப்பு மேற்கொள்ள திருச்சி மக்களவைத் தொகுதி எம்பி துரை வைகோ வைத்த வேண்டுகோள் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் , மதசார்பின்மைக்காக போராடியவர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக வசமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டையும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி கூட்டணிக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ராஜ்யசபா சீட்டும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதால், தேமுதிகவின் நிலை என்ன? விரைவில் தெரியவரும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கையை கண்டித்து நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக மாமல்லபுரத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.