விருதுநகரில் அமைச்சர்களுக்கு இடையே நிலவி வந்த மறைமுக உட்கட்சிப் பூசல், அரசு விழா பேனரில் ஏற்பட்ட பெயர் சர்ச்சை காரணமாக மேடையிலேயே அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக வெடித்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விருதுநகரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக, சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமை தாங்கினார். ஆனால், விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரான ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாக அச்சிடப்பட்டிருந்தது. மாறாக, அந்த நிகழ்ச்சிக்கு வராத, அதுமட்டுமன்றி அந்தத் துறைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத மற்றொரு தவெக அமைச்சரான கீர்த்தனாவின் பெயர் முதலிடத்தில் இடம் பெற்றிருந்தது.
இதைக் கண்டு கடும் கோபமடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சியரிடம் மேடையிலேயே நேரடியாக வெளிப்படையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நிகழ்ச்சிக்கு வராத ஒருவரின் பெயரைப் பேனரில் முதலில் போட்டிருப்பது என்ன நியாயம்? நான் வேண்டுமானால் இங்கிருந்து எழுந்து சென்று விடவா?" என ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், "இதுபோன்ற தவறுகளைச் செய்ய வேண்டாம் என ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும், அதிகாரிகள் தொடர்ந்து இதே தவறைச் செய்கிறீர்கள்" எனக் கூறி, மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரையும் நேரில் அழைத்து அங்கிருந்தவர்கள் முன்னிலையிலேயே கடுமையாகக் கண்டித்தார். இந்த சம்பவத்தால் விழா அரங்கில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

LIVE 24 X 7