திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக 74 வடமாநிலத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுப் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களில் 10 பேர் உயிரிழந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி ஒடிசாவைச் சேர்ந்த ரீட்டா ஜுஜிங்கா (28), பிங்கி ஜூஜிங்கா (21) மற்றும் சுமித்ரா ஜிங்கா (22) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரீத்தி தேவி என்பவரும் பரிதாபமாக உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
மறுபுறம், தீவிர சிகிச்சைக்குப் பின் மஞ்சங்காரணை மற்றும் நல்லூர் தனியார் மருத்துவமனைகளில் இருந்து மொத்தம் 21 வடமாநில பெண் தொழிலாளர்கள் முழுமையாகக் குணமடைந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்காலிகமாகக் கன்னிகைப்பேரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LIVE 24 X 7