கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த விஜய் (எ) மாணிக்கம் என்ற சென்ட்ரிங் தொழிலாளி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ந்த கொடுமையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அச்சிறுமி, தனது வயிற்றில் கடுமையாக வலிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமி சிகிச்சைக்காகக் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சையில் இருந்தபோது, தனக்கு நேர்ந்த துயரத்தை தனது பாட்டியிடம் அச்சிறுமி விவரமாகக் கூறியுள்ளார்.
பேத்தியின் நிலையைக் கேட்டு ஆத்திரமடைந்த பாட்டி, அரிவாளை எடுத்துக் கொண்டு மாணிக்கத்தைத் தேடிச் சென்றுள்ளார். குளித்தலை தேவதானம் பகுதியில் நின்றுகொண்டிருந்த மாணிக்கத்தை, மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாட்டி வெட்டியுள்ளார். பின்னர் அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு காவல் நிலையம் நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது கடம்பர்கோவில் நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் வைத்து, சிறுமியின் உறவினர்களும் மாணிக்கத்தைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த குளித்தலை போலீசார் உடனடியாக இடத்திற்கு விரைந்து சென்று, அப்பெண்ணிடமிருந்த அரிவாளைப் பறிமுதல் செய்து அவரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு நபரையும் போலீசார் பிடித்துச் சென்றனர்.
தலை, காது மற்றும் கைகளில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மாணிக்கத்தை போலீசார் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

LIVE 24 X 7