2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சீரமைப்புப் பணிகளைச் செய்ய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புக் குழு ஒன்றை அமைத்திருந்தார். இக்குழு தொகுதிவாரியாக நேரில் சென்று கள ஆய்வு நடத்தித் தயார் செய்த பரிந்துரை அறிக்கையைத் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது.
திமுகவில் தற்போது 78 மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் உள்ள நிலையில், நிர்வாக வசதிக்காக இந்த எண்ணிக்கையை 100-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ஒரு மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் 2 முதல் 6 சட்டமன்றத் தொகுதிகள் வரை இருக்கும் நிலையில், இனி அதிகபட்சமாக 3 தொகுதிகள் மட்டுமே ஒரு மாவட்டச் செயலாளரின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கள ஆய்வில் சரியாகச் செயல்படாதது கண்டறியப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவர்களுக்கு மாநில அளவில் மாற்றுப் பொறுப்புகளை வழங்கத் தலைமை முடிவெடுத்துள்ளது.
மூத்த நிர்வாகிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, மாவட்டச் செயலாளர் பதவிகளில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிகளவில் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்பும், அவருடன் இணைந்த வேறு சிலருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளும் வழங்கப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மூத்த நிர்வாகிகளுக்கும் இளைஞர்களுக்கும் இடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இன்றிச் சீரமைப்புப் பணிகளை முடிக்கத் தலைமை திட்டமிட்டுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு குறித்த அடுத்தகட்ட முடிவுகளை மேற்கொள்வதற்காக, ஆகஸ்ட் 22-ஆம் தேதி காலை 10 மணிக்குத் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஆலோசித்து ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தொடர்பான அதிரடி அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7