K U M U D A M   N E W S

பெங்களூருவில் சீட்டு கட்டு போல் சரிந்த கட்டிடம்.. கட்டிட உரிமையாளர் மகனை கைது செய்த போலீஸ்

தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட உரிமையாளரின் மகன், காண்ட்ராக்டர் முனியப்பா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தவெக மாநாடு.. விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிகட்ட பணிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இருக்கு..கனமழை இருக்கு.. - எச்சரிக்கும் வனிலை மையம்..எதிர்கொள்ள தயாரா இருங்க மக்களே!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

“அரசு எந்த உதவியும் செய்யல..” எம்எல்ஏ கோ.தளபதியை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.

சுற்றுலாப் பயணிகளே அங்க மட்டும் போகாதீங்க..! - வனத்துறை விதித்த அதிரடி தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.

"போச்சு.. நாசமா போச்சு.." வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்.. என்ன நடக்கிறது கோவையில்..?

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.

இனியும் தவறு நடந்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும்... திண்டுக்கல் ஐ.லியோனி ஆவேசம்!

ஆளுநர் ரவி தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடத்தை சேர்த்து பாட வேண்டும் எனவும் மீண்டும் இதுபோன்ற தவறு நடந்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும் என திண்டுக்கல் ஐ.லியோனி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

#JUSTIN: கொட்டி தீர்த்த கனமழை.. பெங்களூருவில் தத்தளிக்கும் மக்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள். சாலைகளில் வாகனங்களே இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், படகுகள் மூலம் மக்கள் மீட்பு

சபாநாயகர் அப்பாவு வழக்கில் புதிய திருப்பம்.... உயர்நீதிமன்றம் உத்தரவு!

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

நாளை உருவாகும் புயல்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.