K U M U D A M   N E W S

கொட்டித் தீர்த்த மழை.. வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. வெளியே வர முடியாமல் தவித்த மக்கள்

தேனி மாவட்டம் வரதராஜபுரம் புளியமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"எல்லாத்துக்கும் காரணம் அது மட்டும் தான்"- பழநியில் கண் கலங்கி நிற்கும் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ரோடா..? கடலா..? முடங்கிய முக்கிய சாலை.. மிதக்கும் வாகனங்கள் - அதிர்ச்சி வீடியோ

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடர் மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

காட்டாற்று வெள்ளம்.. 'வேண்டாம்' பறந்த முக்கிய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் சீமான் தமிழரா?.. கொந்தளித்த ஆ.எஸ்.பாரதி

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் மாற்றம்? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு| Kumudam News 24x7

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியை மாற்றி புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடா?.. திராவிட நாடா?.. - அன்பில் மகேஸ் Vs சீமான்

தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடன் நேரில் விவாதம் செய்ய தயாரா? என சீமான் கேள்வி

ஆளுநர் மீது வன்மத்தைக் கக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது - எல்.முருகன்

ஆளுநர் மீது வன்மத்தைக் கக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

#JUSTIN || பெங்களூரை திக்குமுக்காட வைக்கும் கனமழை - கதி கலங்கிய மக்கள்

பெங்களூருவில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்