K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=2425&order=created_at&category_id=3

விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளி..? போட்டுடைத்த அண்ணாமலை! த.வெ.க.-வுக்கு புதிய சிக்கல்?

தவெக தலைவர் விஜய் பரந்தூரில் ஒரு சிபிஎஸ்இ பள்ளியை நடத்திவருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். கையில் பேப்பரை காட்டி, அண்ணாமலை புட்டு புட்டு வைத்த தகவல் என்ன? விஜய் நடத்துவதாக கூறப்படும் பள்ளியின் முழு பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில் ..

செல்போனில் பிஸியான தாய் அடித்தே கொலை செய்த கொடூரம் கணவன், இரு மகன்கள் கைது

எப்போதும் செல்போனிலேயே பேசிக் கொண்டிருந்த பெண்ணை, அவரது குடும்பமே அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

சீமானின் முதல் மனைவி யார்? விஜயலட்சுமியுடன் ரகசிய திருமணம்? சீமானை நெருக்கும் நீதிமன்றம்!

நடிகை விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா என்று சென்னை உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது, நாம் தமிழர் தம்பிகளை கதிகலங்க வைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

பெண்ணுக்குள் பேய்... சரக்கு... சிகரெட்... சிக்கன் பிரியாணி... வித்தை காட்டும் சாமியார்!

சாலை விதிகளை மதிக்காமல், வாகனங்கள் ஓட்டுவதிலும் சரி, வித்தை காட்டி பேய் ஓட்டுவதிலும் சரி, நம்ம ஊர் ஆட்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. விதவிதமாக பேய் ஓட்டுபவர்களுக்கு மத்தியில், சாமியார் வைத்தியர் ஒருவர் செய்த சம்பவம், “யார் சாமி இவன்” என கேட்க வைத்துள்ளது...

“வீட்டுல மரியாதையே இல்லை” மகளுக்கு கத்திக் குத்து மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்

வீட்டில் தன்னை யாருமே மதிக்காததால், மனைவியை கொலை செய்த கணவன், அதனை தடுக்கச் சென்ற மகளையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கும் இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

இளம்பெண்களுக்கு காதல் வலை கூட்டு பாலியல் வன்கொடுமை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்!

இளம்பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து, அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், பின்னர் விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி திணிப்பு மீண்டும் ஒரு மொழிப்போருக்கு வழிவகுக்கும்.. மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோசமடைந்த நாகேந்திரன் உடல்நிலை.. தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதி

நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதியளித்த நீதிமன்றம் அவரின் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு  நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

ஜிஎஸ்டி கட்டாமல் மோசடி.. தனியார் நிறுவன இயக்குநரை கைது செய்த போலீஸ்

பணிக்கு ஆட்களை அனுப்பியதற்காக பணத்தை பெற்று கொண்டு 16.32  லட்சம்  ரூபாய் ஜிஎஸ்டி கட்டாமல் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கத்தி முனையில் வடமாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுவன்..? திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

சென்னையில் தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திடீரென பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி.. காரணம் என்ன?

கரூர் அருகே தனியார் பள்ளியின் இரண்டாம் தளத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடுங்க வைத்த பழவந்தாங்கல் ரயில் நிலைய சம்பவம்.. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மர்ம நபர், பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றிய சம்பவத்தின் எதிரொலியாக ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்.. அண்ணாமலை கண்டனம்

கோவையில் 17 வயது சிறுமியை ஏழு மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார். 

ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணி.. தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள  கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது. 

மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி.. ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

வறுமையை ஒழிப்பதற்காகவும் தமிழகம் வருகிறார்கள் - எம்.எல்.ஏ எழிலன் பேச்சு..!

பீகார் மற்றும்  உ.பி.மாநிலத்தில் வசிக்க கூடிய பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த ஊரில்  சுயமரியாதை இல்லாததால் அவர்கள் தமிழகத்துக்கு  வந்து வசிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்  எழிலன் தெரிவித்துள்ளார்.

லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்து - காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“வீட்டுல மரியாதையே இல்லை” மகளுக்கு கத்திக் குத்து மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்

வீட்டில் தன்னை யாருமே மதிக்காததால், மனைவியை கொலை செய்த கணவன், அதனை தடுக்கச் சென்ற மகளையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கும் இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் கைது..!

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கும் முதல்வர்- அண்ணாமலை விமர்சனம்

சென்னை பழவந்தாங்கலில் பெண் காவலருக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடப்பதாக குற்றம்சாட்டினார். 

தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம்- உதயநிதி கண்டனம்

மத்திய அரசிடம் நிதி உரிமை கேட்டால் இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுகிறார்கள் என்றும் தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samagra Shiksha Scheme : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் என்னென்ன..? ஒரு பார்வை

Samagra Shiksha Scheme in Tamil : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 40 லட்சம் மாணவர்களும்,  44 ஆயிரம் ஆசிரியர்களும் பயன்பெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்துள்ளதால் இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.