K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=2375&order=created_at&category_id=3

சட்டம் இங்கே..பாதுகாப்பு எங்கே? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

"இந்தி கவிதை சொல்லு” சிறுவனை அடிவெளுத்த டீச்சர்! பெற்றோர்கள் செய்த சம்பவம்!

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இந்தியில் கவிதை சொல்லவில்லை எனக்கூறி சிறுவனை ஆசிரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நிலை அறிந்து பெற்றோர் செய்தது என்ன? பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

தேர்தலில் களமிறங்கும் சசிகலா..? ஜெ., பிறந்தநாளில் புதிய வியூகம்..! எந்த தொகுதியில் போட்டி?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் அரசியலில் களமிறங்குவது குறித்த வியூகத்தை சசிகலா முன்னெடுக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தலில் களமிறங்கிறாரா சசிகலா? எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார்? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜெயலலிதா பிறந்தநாள்... வேதா இல்லத்தில் ரஜினி! திடீர் விசிட்... என்ன காரணம்..?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த், ஜெ-வின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

ஆன்லைன் மோசடி..! பணத்தை இழந்த நடிகர்! அழுவதா? சிரிப்பதா?

எவ்வளவு தான் நாம நெறய படிச்சி உலக அறிவோட இருக்கோம்னு நினச்சாலும், ஒருத்தன் ஆன்லைன் மோசடி பண்ணிட்டு போய்ட்டான் என வேதனை தெரிவித்து பிரபல சின்னத்திரை நடிகர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாதக-வில் இருந்து Exit! எம்.பி. ஆஃபர் தரும் திமுக? பனையூரா? அறிவாலயமா?

நாதக-வில் இருந்து வெளியேறியுள்ள காளியம்மாள், திமுகவில் ஐக்கியமாகப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், திமுகவிடம் காளியம்மாள் ஒரு முக்கிய டிமாண்டை வைத்ததாகவும், அதற்கு அறிவாலயமும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி காளியம்மாள் வைத்த டிமாண்ட் என்ன? அறிவாலயம் இந்த டிமாண்டிற்கு ஒகே சொன்னதன் பின்னணி என்ன? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.

15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழக அரசு.. வெளியான அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும்  15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்.. ரஜினி மரியாதை

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதத்தில் நிரப்ப வேண்டும்- நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்த மாணவன்.. வெளியான திடுக்கிடும் தகவல்

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளி மாணவியை கழுத்தை அறுத்த விவகாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 

தடம் புரண்ட சரக்கு ரயில்.. திருவாரூரில் பரபரப்பு

திருவாரூரில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டு ரயில் பாதையை விட்டு கீழே இறங்கி ஜல்லி கற்களில் சிறிது தூரம் தூரம் ஓடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை - ஜாக்டோ-ஜியோ விளக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை

ரயிலில் துணை நடிகையிடம் திருடிய காவலர்... ரயில்வே போலீசார் விசாரனை

ஓடும் ரயிலில்  தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு லட்சம் நகைகள் அடங்கிய கைப்பையை திருடிய காவலரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உளவுத்துறை காவலரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு காவலர்கள்.. போலீசில் புகார்

மாநில உளவுத்துறை காவலரை தாக்கியதாக சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர், உதவி ஆய்வாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு காவலர்கள் சேர்ந்து உளவுத்துறை காவலரை சரமாரி தாக்கியதில் கால் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15 ஆயிரம் கோடி கொடுத்தால் மும்மொழிக்கொள்கையை ஏற்றுக் கொள்வீர்களா? முதலமைச்சருக்கு டி. ஜெயக்குமார் கேள்வி

பத்தாயிரம் கோடி ரூபாயை கொடுத்தால் கூட மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா? என்று முன்னாள் அமைச்சர் டி.  ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதி நிறுவன கடன் தொல்லையால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..! 

நிதி நிறுவன கடன் தொல்லையால், தன்னுடைய சாவுக்கு காரணம் இவர்கள் தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் மற்றும் போலீசாரை தாக்கிய மதுபோதை இளைஞர்..!

சாலையில் இளம்பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் மீது மதுபோதை இளைஞர் தாக்குதலால் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊருக்குள்ள 'ராக்கெட் ராஜா' பாம்பு மூலம் தோஷம் கழிப்பு? நகையை பறிகொடுத்த பெண்!

அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்க முதல்வர் மருந்தகம் - எழிலன் பேச்சு

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என திமுக மருத்துவர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் தெரிவித்துள்ளார். 

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பானிப்பூரி விற்கிறார்கள் - ஏ.வ. வேலு பேச்சு

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து கொத்தானார் வேலையும், பானிபூரியும் விற்கிறார்கள் என்று வாணியம்பாடியில் நடைப்பெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர், ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

ஒசூரில் பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது...!

ஒசூரில் கடந்த 2 மாதங்களாக பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பை சேர்ந்த அதன் தலைவனை காவல் துறையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சாக்கு மூட்டையில் மிதந்த அண்ணன்... சொத்து தகராறில் கொடூரம் துண்டு துண்டாக வெட்டி கொலை!

பெரியப்பா மகனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த தம்பி, சடலத்தை சாக்கு முட்டையில் கட்டி குளத்தில் வீசிய கொடூரம் நெஞ்சை பதற வைத்துள்ளது.

திருட்டு வழக்கில் சிக்கிய ஞானசேகரன்.. 80 சவரன் நகை பறிமுதல்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை பள்ளிக்கரணை போலீசார் கொள்ளை வழக்கில் கைது செய்த நிலையில், மேலும் ஆறு கொள்ளை வழக்கில் கைது செய்து, அவரிடம் இருந்த 80 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மஹாசிவராத்திரி ஈசனுடன் ஓர் இரவு.. சத்குரு வழங்கும் நள்ளிரவு மஹாமந்திர தீட்சை..!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அழகும் ஆன்மீகமும் சங்கமிக்கும் இடத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார் ஆதியோகி.  தமிழகத்தின் குறிப்பாக கோவையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக ஆதியோகியின் திருவுருவம் மாறியுள்ளது.

2,300 குழந்தைகள் மீட்பு... 899 பேர் மீது சந்தேக வழக்கு... ரயில்வே போலீஸின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரத்து 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.