K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=2400&order=created_at&category_id=3

பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் ... 7 திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது...!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் திருட்டு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், 200 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

ஊருக்கு மட்டும் உபதேசம்? கதை திருட்டில் சிக்கிய ஷங்கர் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்!

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ‘சர்ச்சை இயக்குநர் ஷங்கர்’ ஆக வலம் வருகிறார். எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை? போக்சோவில் சிக்கிய மாமா... விசாரணைக்கு பயந்து விபரீத முடிவு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொழித்திணிப்பை இருமொழி கொள்கையால் வெல்வோம் - எடப்பாடி பழனிசாமி

“எந்த ஒரு மொழியையும் எவராவது நம்மீது திணிக்கத் துணிந்தால் அதனை பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு முக்கிய உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை - 2 பேர் கைது..!

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை செய்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செல்வப்பெருந்தகைக்கு செக்? டெல்லி தலைமையிடம் புகார்! வெடிக்கும் உட்கட்சி பூசல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெறுங்கி வரும் வேலையில், தமிழக காங்கிரஸில் புதிய பிரளயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி தலைமையை சில நிர்வாகிகள் சந்தித்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக புகார் பட்டியலை வாசித்திருக்கும் சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கழிப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வரும் நிலையில், 67 இலட்சம் செலவில் கட்டிய புதிய பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சொன்னதை செய்த அண்ணாமலை.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

தமிழகத்தில் உள்ள கறைபடிந்த அமைச்சரவையை மக்கள் விரைவில் தோற்கடிப்பார்கள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு 'கெட் அவுட் ஸ்டாலின்'  (#GetOutStalin) என்ற ஹேஷ்டேக்கை மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ஹேஷ்டேக் டிரெண்ட்டாகி வருகிறது. 

நகைப்பட்டறையில் தங்க கட்டிகள் திருட்டு... போலீசார் விசாரணை

நகைப்பட்டறை அதிபரின் தங்க கட்டிகள் திருடுபோனதாக போலீசில் புகார். வீட்டு பணிப்பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் - நடிகை விஜயலட்சுமி

சீமான் மீதான வழக்கை முடித்து வைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில்,  நீதிமன்றத்திற்கு தான் முழு ஒத்துழைப்பு தருவேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.  

கோவிலில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால் வழக்குப் பதிவு - சென்னை உயர்நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூத்த மருத்துவர்களை பணியில் நியமிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,  கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என  தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேலை வாங்கி தருவதாக 50 லட்ச ரூபாய் வரை மோசடி... முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கையால் ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும் - இரா.முத்தரசன் வேதனை

புதிய கல்விக்கொள்கையில் தற்போது 3-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் வகுப்பு செல்ல முடியும். அதேபோல், 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 8-ம் வகுப்புசெல்ல முடியும் என உள்ளது. இந்த நிலையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை இடை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழிக் கொள்கையை கொடுக்காமல் புதிய கல்வியை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தஞ்சையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஆதியோகி திருவுருவம் 112 அடியில் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன..!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அழகும் ஆன்மீகமும் சங்கமிக்கும் இடத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார் ஆதியோகி. தமிழகத்தின் குறிப்பாக கோவையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக ஆதியோகியின் திருவுருவம் மாறியுள்ளது.

கடலூரில் 2 நாட்கள் முதலமைச்சர் கள ஆய்வு..  நெய்வேலியில் ரோட் ஷோ

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபடுகிறார்.

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கமா? இல்லயா? என்பது விளக்கமளிக்க காவல்துறைக்கு உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கல்வி நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

"Get Out Modi என கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா?" - அண்ணாமலை ஆவேசம்

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லட்டும் பார்க்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சரவை கூட்டம் தேதி அறிவிப்பு

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு -அமைச்சர் அன்பில் மகேஷ்

ஜூன் மாதம் முதல் ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் களம் இறங்கிய வடமாநில கொள்ளை கும்பல்? உயரமான கட்டிடங்களிலும் ஸ்பைடர் மேன் போல இறங்கி கைவரிசை...!

சென்னையில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வடமாநில கொள்ளை கும்பல் முகமுடி அணிந்து கைவரிசை காட்டுவதால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தது - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.