K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=2275&order=created_at&category_id=3

மின்சார ரயில்கள் ரத்து - அலைமோதும் பயணிகள்

சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் அதிரகரித்து காணப்படுகிறது.

சிவில் வழக்கு: விதிகளை பின்பற்ற காவல்துறைக்கு உத்தரவு

சொத்து தொடர்பான சிவில் பிரச்சினை வழக்குகளை கையாளும் போது ஏற்கனவே உள்ள  விதிகளை  முறையாக பின்பற்ற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய நபர்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது..!

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து வெளிநாடு தப்பிச் சென்றவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்..

பெண்குழந்தைகளுக்கு யாருமே உங்களை தொடக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல்,  தீய தொடுதல் குறித்து சொல்லி தருவதை விட,  உன்னை யாருமே தொட விடக்கூடாது என கற்றுத்தாருங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்களை தாக்கிய மணல் மாஃபியாக்கள்!

மண் கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்ட சமூக ஆர்வலர் மீது திமுக நிர்வாகி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்

சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடலூர் மாவட்டத்தில் இரு கோவில்கள் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிகில் முதல் இஃப்தார் வரை: பட்டியல் போட்டு விஜயை தாக்கிய ப்ளூசட்டை மாறன்!

”நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தமிழக வெற்றிக் கழகம். ரசிகர்கள், தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்” என பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் ரணகளத்தை உண்டாக்கியுள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு மினி- மாரத்தான்.. ஏராளமானோர் பங்கேற்பு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச்- 08)  தாம்பரம் மாநகர காவல்துறையின் சார்பில் மகளிர் அதிகாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் விதமாக ஒரு சிறப்பு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

விஜய் கலந்து கொண்ட நோன்பு நிகழ்ச்சி.. லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த நிர்வாகிகள்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்  ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

2 மாதத்தில் 9 வது முறை..இலங்கையின் பிடியில் 107 தமிழக மீனவர்கள்: கடிதம் அனுப்பிய முதல்வர்!

கடந்த இரு மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை என்றும், இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப் படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Gold Rate: மகளிர் தினத்தன்று ஷாக் கொடுத்த தங்கம் விலை! எங்கே போய் முடியுமோ?

தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

சமமாக பார்க்கும் தைரியம் அவர்களுக்கில்லை: கவனம் ஈர்த்த எம்.பி கனிமொழியின் பதிவு

உண்மையான சுதந்திரம் என்பது நமக்கு சொந்தமான விஷயங்களுக்கு போராட வேண்டிய அவசியமில்லாதது தான் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் எம்.பி கனிமொழி.

வெள்ளை சட்டை.. தலையில் குல்லாவுடன் விஜய்.. நெகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

கல் உடைக்கும் ஆலையில் தொழிலாளி பலி.. திமுக எம்எல்ஏ விடுதலை ரத்து!

கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி  பலியானது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"மருத்துவ பாடத்திட்டம் தமிழில் வேண்டும்" - அமித்ஷா வலியுறுத்தல்..!

மருத்துவம், பொறியியல் பாடத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

பார்க்கிங் வசதி இல்லாத உணவகங்களுக்கு ஆபத்து..!

சென்னையில் உரிய பார்க்கிங் வசதி இல்லாத 80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்துக் காவல் துறை சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. நீதிமன்றம் உத்தரவு

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் உயர்கல்வி சேர்க்கையில் பின்தங்கிய தமிழ்நாடு.. என்னதான் காரணம்? வெளியான தகவல்

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களின் பங்களிப்பை ஆய்வு செய்ததில், தமிழ்நாடு மிகவும் பின்தங்கி உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள்.. மா.சுப்பிரமணியன் பெருமிதம்

நீரழிவு மருந்துகள் முதல்வர்  மருந்தகங்களில் 11 ரூபாய்க்கும் , மத்திய அரசு நடத்தும் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கும், தனியார் மருந்தகங்களில் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அந்த விஷயத்தை முதல்வரை தவிர வேறு யாரேனும் செய்ய முடியுமா? வைரமுத்து கேள்வி

ஒறு கூரையின் கீழ் அனைத்து காட்சி தலைவர்களையும் அமர வைத்தவர்தான் முதல்வர், வேறு யாரேனும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடியுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் தகவல்

மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பெயரால் 8 மாதங்களில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இனி ஊராட்சித் தோறும் மகளிர் சுய உதவிக்குழு ஆய்வு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களை பெற முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வனத்துறை காவலரிடம் 6.80 கோடி மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனத்துறை பாதுகாவலரிடம், சுமார் ரூ.6.8 கோடி சைபர் க்ரைம் மோசடி நடந்துள்ளது. ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் முதலீட்டில் இழந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

புழல் மத்திய சிறையில் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பான பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.