K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=2300&order=created_at&category_id=3

திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் சித்ரவதை.... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை..

திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த டிராவல்ஸ் உரிமையாளரை, அதே திருட்டை ஒப்புக்கொள்ள கூறி சித்ரவதை செய்த போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது

ஜப்தியாகும் சிவாஜி வீடு! குடும்பத்தில் மோதல்? பரிதாபத்தில் அன்னை இல்லம்!

நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த சிவாஜியைப் போல, அவர் ஆசை ஆசையாக வாங்கிய அன்னை இல்லமும் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். ஆனால், தற்போது அந்த அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படும் என்ற நீதிமன்ற உத்தரவால், சிவாஜி குடும்பத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: செல்வ வரி ஆவணங்கள் முழுமையாக இல்லை - வருமான வரித்துறை

முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் முழுமையாக இல்லை என வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம்.. நிலம் கையகப்படுத்தும் ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு.. ஜவுளி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!

இலவசம் எனக்கூறி கேரி பேக்கிற்கும் பணம் வசூல் செய்த ஜவுளி நிறுவனம், அதன்  வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவாஜி கணேசன் வீட்டில் எனக்கு உரிமை இல்லை.. மகன் ராம்குமார் தகவல்

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில்  தனக்கு எந்த பங்கும்  இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராம்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மெரினா அருகே வாகன சோதனையில் சிக்கிய 28 கிலோ தங்கம்.. தீவிர விசாரணையில் போலீஸார்

Gold Seized in Chennai Marina Beach : சென்னை மெரினா அருகே வாகன சோதனையின் போது பிடிப்பட்ட 28 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

“எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்!” மீண்டும் சைலண்ட் மோடில் நடிகை சீமான் நிம்மதி பெருமூச்சு!

சீமான் விவகாரத்தில், இதுக்குமேல் போராட விருப்பமில்லை என அவர் மீது பாலியல் புகாரளித்த நடிகை புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தையே சூடாக வைத்திருந்த இந்த பஞ்சாயத்து, தற்போது புஷ்வானமாக போய்விட்டதாக தெரிகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம்..?

சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவனை சிக்க வைத்தது யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!

சீர்காழியில் மூன்றரை வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில், சிறுவன் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தங்களது சந்தேகமே அவர்கள் மீது தான் சிலரை கை காட்டியுள்ளனர் சிறுமியின் பெற்றோர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும், கைதான சிறுவனின் பெற்றோரும் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்களை இப்போது பார்க்கலாம்....

சுற்றுலா வாகனங்கள் கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் - தமிழக அரசு

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்த நீதிபதியே தான் மீண்டும் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கான பிரத்யேகமாக உள்ள நீதிபதியே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

“தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” ஈஷாவில் நாட்டு மாட்டு சந்தை முதல் ரேக்ளா பந்தயம் வரை..

கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா நடைபெற்று வருகிறது. 

Special Classல் பாலியல் சீண்டல்? துடித்துபோன மாணவன்.. கொடூர ஆசிரியரின் கோர முகம்!

சிறப்பு வகுப்பில் மாணவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவருக்கு நேர்ந்தது என்ன? பள்ளி நிர்வாகம் செய்தது என்ன? விசாரணையில் வெளியானது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

”ஏன்னா நீதான் என்ன லவ் பண்ணலல” எமனாக மாறிய காதலி காதலனுக்கு தேனீரில் எலி பேஸ்ட்!

பிரேக் அப் செய்ததால் காதலனுக்கு தேனீரில் எலி பேஸ்ட் கலந்துக்கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலன் பிரேக் அப் செய்தது ஏன்? அவரின் தற்போதைய நிலை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

8 அமைச்சர்கள்... 4 டீம்...! அமித்ஷா கையில் ஹாட் ரிப்போர்ட்..? ஷாக்கில் திமுக...!

அமித்ஷாவின் அதிரடி கோவை விசிட் மற்றும் சீரியஸ் டிஸ்கஷனைத் தொடர்ந்து, அவர் கையில் தி.மு.க. அமைச்சர்களின் பர்ஃபார்மென்ஸ் ரிப்போர்ட் கிடைத்ததும், அதற்கு அவர் காட்டிய ரியாக்ஷனும்ன்தான் அரசியல் களத்தில் ஹாட் நியூஸாக வலம் வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

சீமானுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்.. நாதக நிர்வாகி எடுத்த அதிரடி முடிவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் குறித்து நாதக நிர்வாகி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்.. மருத்துவமனைக்கு விரைந்த ஸ்டாலின்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை காண்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்தார்.

இதனால் தான் உச்சநீதிமன்றம் சீமானுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.. உண்மையை போட்டு உடைத்த நடிகை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களுக்கான நிவாரண தொகை அதிகரிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு  வரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தேர்தலின் போது வானவேடிக்கை போல் வந்த கட்சிகள் கரைந்துவிடும்-விஜயை தாக்கிய துரைமுருகன்?

திருவிழா வானவேடிக்கை போல் சிறுசிறு கட்சிகள் வருவார்கள் என்றும் தேர்தல் வர வர அக்கட்சிகள் கரைந்துவிடும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

பிரபல திரையரங்கம் செய்த பகீர் செயல்.. செக் வைத்த உணவு பாதுகாப்புத் துறை

பிரபல திரையரங்கில் காலாவதியான குளிர்பானத்தை விற்றதாக பெண்  குற்றம்சாட்டிய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அத்திரையரங்கில் அதிரடி சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுகிறார்.. விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். 

12th board exam: நாளை தொடக்கம்.. மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தேர்வுத்துறை

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கடத்தூர் நகர செயலாளராக உள்ள சுதாகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளியால் பரபரப்பு!

சென்னை எம்.கே.பி நகர் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி குற்றவாளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.