தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு...எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சிபிஎம் வாசுகி, தமிழக அரசு, போலீஸ், முதலமைச்சர் முகஸ்டாலின், CPIM Vasuki, Tamil Nadu Government, Police, Chief Minister MK Stalin
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றுகொண்டிருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகைகளுக்கு அழகு சிகிச்சை அளித்தது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பார்த்துவிட்டு, கிளினிக் வந்த பெண்ணிடம் நயவஞ்சகமாக பேசி ரூ. 27 லட்சம் மோசடி செய்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதில் பெற்றோரிடம் கோவித்துக் கொண்டு ஊரை விட்டு சென்றவர், 40 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோர் மற்றும் சொந்தங்களுடன் இணைந்த நிகழ்வு பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
பயிர் செய்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராததால், கண்ணீருடன் விவசாயிகள் தர்பூசணி பழங்களை விவசாய நிலத்திலேயே டிராக்டர் மூலம் ஓட்டி அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் அருகே வடுகப்பட்டி மின் மயானத்தில் கவிஞர் வைரமுத்து தாயாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முழுவதும் சூறாவளி காற்றால் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு போலீசார், பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
பல்லாவரம் அருகே 13-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் மற்றும் சிறுமியின் தாய் உட்பட 13 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
உதகையில் தேசிய அளவிலான 136-வது மற்றும் 137 - வது நாய்கள் கண்காட்சி துவங்கியது. ஜெர்மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில் மற்றும் உள்நாட்டு ரகங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாரை உள்ளிட்ட 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை மட்டும் வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறமுடியாது எனவும் பெண்களுக்கு எதிரான குற்றம் குறைந்துள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்க நினைப்பவர் எந்த முறையில் வந்தாலும், அவனுக்கு மரியாதை கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்
இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை தமிழக அரசு தலைமை கொறடா க.ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் S-400 ' சேதமடைந்துள்ளதாகவும், செயலிழந்துள்ளதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ரெயில் பாதையில் விழுந்த ராட்சச பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இரண்டாவது நாளாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரத்தில் மேட்ரிமோனி அலுவலக உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரால் பரபரப்பு
தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு தங்கள் சிறிது, சிறிதாக உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தினை நன்கொடையாக வழங்கிய சிறுவர்களின் செயலுக்கு பாராட்டு
CM MK Stalin Speech at Dravida Model 2.0 : தமிழகத்தின் ராக்கெட் வேக வளர்ச்சியை வரும் காலத்தில் பார்க்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் பேச்சு
India vs Pakistan War Update : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரித்து காணப்படும் சூழலில், சி.ஐ.எஸ்.எஃப். மற்றும் தமிழ்நாடு காவல் பிரிவு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனை அருகே நடிகர் சிவாஜி கணேசன் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இரண்டு கைகளை இழந்த தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளி மாணவன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு