இதே போல, 18 பேர் மத்திய அரசு வேலை வேண்டி ஹரிஹர குமாரை அணுகி உள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் ரூ.1,65,70,000 பணத்தை ரொக்கமாகவும் வாங்கி கொண்டார். இதையடுத்து அவர் பணத்தை கொடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கொடுத்துள்ளார். அவர்கள் அந்த ஆணைகளை சோதனை செய்த போது அவை போலி என்பது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது ஹரிஹர குமார் தராமல் தலைமறைவாகி விட்டது தெரிந்தது. பாதிக்கப்பட்ட 19 பேரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் ஹரிஹரகுமார் 19 பேரிடம் இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூபாய் 1,65,70,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஹரிஹர குமாரை வேப்பேரி பகுதியில் வைத்து நேற்று போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கையை எடுத்த வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் பாராட்டி உள்ளார்.
"இது போன்று பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றும் தனி நபர்களையும், நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என்றும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.
LIVE 24 X 7









