கோவை அரசு மருத்துவக் கல்லூரி கட்டாய முக கவசம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்திய போது மருத்துவமனையில் பல்வேறு பணிகளில் உள்ள கிரிஸ்டல் நிறுவனத்தின் பணியாளர்களை அந்த நிறுவனத்தினர் பணியாற்றும் காவலர், தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் போன்ற பணிகளில் ஈடுபடும் நபர்களை பணியின் போது கைகளுக்கு உரை, முக கவசம் போன்றவற்றை அணிந்து பணியாற்ற அறிவுறுத்தினர்.
அங்கு பணி புரியும் ஊழியர்களும் காவலர்களும் தவறாக புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இந்த மலை காலங்களில் நோய் பரவலை தடுக்க மாஸ்க் அணியலாம் என்றவர், ஆனால் கொரோனா பரவல் அடுத்து கட்டாயம் மாஸ்க் என்பது இங்கு கிடையாது, கோவையில் யாருக்கும் கொரோனோ கிடையாது என்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா விளக்கம் அளித்து உள்ளார்.
LIVE 24 X 7









