K U M U D A M   N E W S

அரசியல்

மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் மயங்கி விட மாட்டார்கள்- திருமாவளவன்

பாஜகவின் மதவாத அரசியலுக்கு பிற மாநில மக்கள் மயங்கி விடுவதுபோல், தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விடமாட்டார்கள் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து

அரசியல் அறிவே இல்ல.. தவெக போஸ்டரால் டென்ஷனாகிய MP கார்த்தி சிதம்பரம்

விஜயும்-காமராஜரும் இணைந்த ஒரு போஸ்டரை தவெக ஆதரவு ஐடி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.

அவர் பேசியதில் தவறில்லை.. கமலுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

கமல்ஹாசன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

பூச்சாண்டி கதையை அவிழ்த்து விடும் முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்

தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

"புலி வருது, புலி வருது".. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்

தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகை.. முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

விஜய் இனிமேல் பதில் சொல்வார்.. கூட்டணி குறித்து நயினார் சூசகம்

விஜய் கூட்டணியில் இணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக?

கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக-திமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.