தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் விஜய். இதனிடையே, அவரது நடிப்பில் வெளியாகி உள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் அவரது கடைசிப் படம் எனக் கூறப்படுவதால், இனி அவரைத் திரையில் பார்க்க முடியாதோ என்ற கவலையில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை (பயோபிக்) திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லீ இயக்கும் பான்-இந்தியா திரைப்படம்?
விஜய்க்கு 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' எனத் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீ, இந்த பயோபிக் திரைப்படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மிகப்பிரம்மாண்டமான முறையில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், விஜய்யின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.
'நாளைய தீர்ப்பு' முதல் முதலமைச்சர் வரை
'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்துள்ள விஜய்யின் திரையுலக மற்றும் அரசியல் பயணத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படும் செய்தி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், விஜய்யின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7