சினிமா

இசையமைப்பாளர் தேவா மறைவு: தேனிசை தென்றலின் LAST CONCERT.. சோகத்தில் ரசிகர்கள்!

மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனவரி 9-ல் பெங்களூருவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி குறித்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் தேவா மறைவு: தேனிசை தென்றலின் LAST CONCERT.. சோகத்தில் ரசிகர்கள்!
Deva Last Concert

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவு காரணமாகத் தனது 75-வது வயதில் கடந்த 17-ஆம் தேதி காலமானார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவரது இந்தத் திடீர் மறைவுத் செய்தி, திரையுலகினரையும் இசை ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

முன்னணி நடிகர்களின் படங்களுக்குப் பல ஹிட் பாடல்களைக் கொடுத்த தேவா, கடந்த சில ஆண்டுகளாக நேரடி இசை நிகழ்ச்சிகள் (Concerts) மூலமாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். அந்த வகையில், வரும் 2027 ஜனவரி 9 அன்று பெங்களூருவில் 'கானா ஹப்பா: தேனிசைத் தென்றல் தேவா லைவ்' என்ற பெயரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அவரது மறைவைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதனை அமைத்த நிறுவனம் அறிவித்துள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவாவின் மறைவு தங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், புக்மைஷோ (BookMyShow) தளம் மூலம் இந்த நிகழ்ச்சிக்காக டிக்கெட் முன்பதிவு செய்த அனைவருக்கும், அடுத்த 5 முதல் 7 வேலை நாட்களுக்குள் 100 சதவீத பணமும் முழுமையாகத் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இசை அமைப்பாளரின் நினைவைப் போற்றும் வகையில், விரைவில் பெங்களூருவில் தேவாவுக்குக் பிரத்யேக அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும் என்றும், அதுகுறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நமது இதயங்களில் என்றும் வாழும் ஒரு இசை மேதையின் இசையையும் அவரது சாதனைகளையும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவோம் எனக் கூறி அந்த அறிக்கையில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.