K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=16200&order=created_at&category_id=12

நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு விடாத கர்மா- மதுரையில் இருந்த வந்த பேரிடி

கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.

குடும்பமாக பைக்கில் சென்ற நேரத்தில் நடந்த அசம்பாவிதம்.. துடிதுடித்து பலியான பிஞ்சு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கணவன், மனைவி மற்றும் குழந்தை படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தலாமா? - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பொது நன்மை எனக்கூறி மாநில அரசுகள் அனைத்து தனியார் சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 8க்கு ஒன்று என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் உத்தரவு என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

வெளியே சொல்லமுடியாத வேதனை - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் வீட்டின் உள்ளே... ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்

சென்னை வளசரவாக்கத்தில் ரக்‌ஷிதா என்பவர் வீட்டில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பைக்கில் பட்டாசு கொண்டு சென்றவர் பலி.. சோகத்தில் மூழ்கிய சிவகாசி

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். 

வாழ்க்கையை கெடுக்கும் வேலையை செய்த 12 மாணவர்கள்.. ஷாக் கொடுத்த போலீஸ்

சென்னை ஜெ.ஜெ.நகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, 100 எல்எஸ்டி ஸ்டாம்புகள், வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மீண்டும் நாங்குநேரி சம்பவம்.. வீடு புகுந்து மாணவன் மீது கொடூர தாக்குதல்.. உறவினர்கள் சாலை மறியல்

நெல்லை மேலப்பாட்டம் பகுதியில் காரில் மோதும்படி சென்றவர்களை தட்டிக்கேட்ட மாணவரை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இதையடுத்து மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆட்டோ ஓட்டுனரின் வெறிச்செயல்

புதுச்சேரியில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 3 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

நண்பர்களுடன் பந்தயம்.. அநியாயமாக பறிபோன உயிர்.. வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

கர்நாடகா கோணனகுண்டே பகுதியைச் சேர்ந்த இளைஞர் தீபாவளியன்று நண்பர்களுடன் பந்தயம் கட்டி பட்டாசு வெடித்தபோது படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திடீரென கேட்ட 'டமால்' சத்தம்.. சென்னையே அலற நடந்த பயங்கரம்

சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி.. கைதான நபர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி காரணாமாக கொல்ல சதி செய்ததாக கைதான சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

#BREAKING: நெல்லையில் மீண்டும் ஓர் நாங்குநேரி சம்பவம்.. நடந்தது என்ன? | Kumudam News

பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம்.. மீஞ்சூரில் பகீர்

மீஞ்சூரில் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

MK Stalin in Coimbatore: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

கோவையில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த படம் பண்றதுக்கு முக்கியமான காரணம் அவருதான்... Sivakarthikeyan Speech | Amaran Success Meet

அமரன் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

ஒரு Actress – ஆ நிறைய படம் நடிக்கலாம் ஆனா...

அமரன் படத்தின் நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி. மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது சந்தோஷமாக உள்ளது.

விஜய்யின் குறி யாருக்கு? முதல்வரா? எதிர்க் கட்சித் தலைவரா?

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு எனவும் பேசியிருந்தது பேசுபொருளானது.

இதனால் தான் சிவகார்த்திகேயன் இந்த படத்துல வந்தாரு.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ட்விஸ்ட்

முகுந்த் வரதராஜன் மனைவி ஒரு எனக்கு கோரிக்கை வைத்தார் என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்துல ரெண்டு படம்... குஷியான ஜி.வி.பிரகாஷ்

ஒரே நேரத்தில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு திரைப்படங்களுமே வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

"வீட்டில் தெலுங்கு.. வெளியே தமிழர் என சொல்பவர்கள் திமுகவினர்"- கடுமையாக சாடிய கஸ்தூரி

வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு, வெளியே வந்து நான் தான் தமிழன் என்று சொல்லுபவர்கள் திமுகவினர் என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டி உள்ளார்.

"சீமான் திடீரென அந்நியனாகவும் அம்பியாகவும் மாறுவார்" - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு போட்டியின் போது அசம்பாவிதங்கள்.. Idea கொடுத்த உயர்நீதிமன்றம்

விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் என நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அடித்த விவகாரம் - ஆட்சியருக்கு பறந்த உத்தரவு

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

சில்லென மாறிய தமிழ்நாடு – வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

ஊட்டியில் ரிசார்டுகள், தங்கும் விடுதிகள் – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

ஊட்டியில் உரிமம் பெற்று செயல்படும் தங்கும் விடுதிகள், ரிசார்டுகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.