K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=16225&order=created_at&category_id=12

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.. வாக்குவாதத்தில் வியாபாரிகள் ஈடுபட்டதால் பரபரப்பு

புதுச்சேரி நேருவீதியில் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகளை போலீசார் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர். அப்போது அவர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இடைத்தேர்தல் தேதி மாற்றம்.. அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்.. காரணம் என்ன?

கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது, நவம்பர் 13ம் தேதியில் இருந்து நவம்பர் 20க்கு மாற்றியமைத்துள்ளது.

ஆடை விதிமீறல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது... உதயநிதிக்கு எதிராக மேலும் ஒரு மனு

முதலமைச்சர், துணை முதலமைச்சர்களுக்கு ஆடை  விதிகளை வகுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் அதிரடி கைது..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

உஷார் மக்களே.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கழிவுநீரில் மூழ்கிய மதுரை... போராட்டத்தில் குதித்த மக்கள்

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காப்பாற்று.. காப்பாற்று.. என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

24 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் டிராபிக்..GST சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்னும் சீராகாமல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு.. மாணவிகள் மயக்கம்... முற்றுகையிட்ட பெற்றோர்கள்

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பயணியை தாக்கிய அரசு பேருந்து நடத்துநர்.. வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

நெல்லை அருகே அரசு பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துநர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஒரே கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை.. அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ராஜதானிக்கோட்டை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே தமிழக அரசு சிறப்பு முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நடத்துநர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்.. வெளியான பதைபதைக்கும் காட்சி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற பேருந்தை நடுவழியில் கை நீட்டி அஜித் என்பவர் நிறுத்தியுள்ளார். பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடைய நண்பர்களுடன் வந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பெட்ரோல் குண்டு வீசிய மாணவன்.. தட்டி தூக்கிய போலீஸ்

மதுரை சோழவந்தான் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் முத்தையா என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்தையா மகன் விக்னேஸ்வரன் மதன்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து மதன்குமார் அளித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

காவலரிடம் அநாகரீக பேச்சு... மெரினா ஜோடி தாக்கல் செய்த ஜாமின் மனு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை மெரீனா கடற்கரையில் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

“புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம்...” விஜய்யை தாக்கி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என தவெக தலைவர் விஜய்யை தாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.   

புதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு.. சிதம்பரம் கோயிலில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் புதிய கொடி மரம் நடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பேனர் வைத்த போது இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்... ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் பொருத்தும்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி மின்சார ஒயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.

கவரப்பேட்டை ரயில் விபத்து... புதிய கோணத்தில் விசாரணையை துவக்கிய போலீஸ்

கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என புதிய கோணத்தில் ரயில்வே போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளனர். விபத்து ஏற்பட்ட ரயிலில் தனியாக எரிபொருள்கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு.. குடியிருப்பு பகுதிகளில் சூழந்த வெள்ளநீர்

கோவை மாவட்டம் வெள்ளிப்பாளையம் பவானி ஆற்றில் உள்ள நீர்மின் உற்பத்தி கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் மதகுகள் திறக்க முடியாததால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. 

#BREAKING: அதிமுக நிர்வாகி துடிதுடிக்க வெட்டி படுகொ** நடுங்கிய சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், நாட்டாக்குடி அருகே அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை

#JUSTIN: Paranur Tollgate Traffic: சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. திக்குமுக்காடிய சுங்கச்சாவடி

பரனூர் சுங்கச்சாவடி முதல் கூடுவாஞ்சேரி வரை போக்குவரத்து நெரிசல்

Chidambaram NatarajarTemple: கொடிமரத்தை மாற்ற வந்த அதிகாரிகள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட திட்சிதர்கள்

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடிமரத்தை மாற்ற வருகை, கொடி மரம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

உஷார் மக்களே...வெளுத்து வாங்க போகும் கனமழை

சென்னை, வேலூர், ராணிப்பேட்டைஉள்பட 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்யும்

Diwali Holidays Tamil Nadu: பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

லீவ் நல்லா இருந்துச்சா..? பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

#BREAKING: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Today Headlines Tamil | 04-11-2024 | KumudamNews

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புச் செய்திகளுடன் செய்திகள்