விசிகவில் கோஷ்டி பூசல் மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்..!
கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.
கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.
உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் கையில் எடுத்து ஆடுவதாக பல மாதங்களாக புகார்கள் புகைந்துகொண்டிருந்தன. அதற்கு தீர்வுகாணும் வகையில் முதல்வர் கையில் சாட்டை எடுக்க, மதுரையில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
டாலரில் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 6.88 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.
உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு வழக்குகளில் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட 150 ரவுடிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை பெற்று தந்ததாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதி இல்லை என்ற பொதுநல மனுவின் மீது நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டுள்ளனர்.
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கணவன் மனைவி என கூறி வீடு வாடகை எடுத்து தங்கியிருந்த நிலையில் ஒரே வாரத்தில் விபரீத முடிவு
தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில், கமல் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் காட்டுத்தீ போல் கர்நாடகவில் பரவி படத்தை வெளியீடு செய்ய முடியாமல் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஊர் முழுக்க கமலுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கை வைத்து தமிழக அரசு நாடகமாடுவது நம்பகத்தன்மை அற்ற செயலாக இருக்கிறது என பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் கருத்து
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநித்துவம் வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்
குழந்தையை இழந்த மொரிசியஸ் தம்பதி விமானத்துக்குள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது
ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் படியில் நின்று ஆடியாவாறு ரீல்ஸ் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரீல்ஸில் ஈடுபட்ட பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி மூலம் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிகான பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது தொடர் போராட்டத்தால் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி, வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் பேட்டி
பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட், குங்குமம், சந்தனம் வழங்கி பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணங்கள் உயர்வு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை மகளிர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து, தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.