K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

விவசாய தண்ணீருக்கு வரி விதிக்க திட்டம்.. கொதிக்கும் தமிழக விவசாயிகள்

மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

1066 அவசர ஆம்புலன்ஸ் சேவை- அப்போலோ மருத்துவமனை எடுத்த முன்னெடுப்பு!

அப்போலோ மருத்துவமனைகள் உலக அவசர மருத்துவ தினத்தை முன்னிட்டு 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'நம்பிக்கையின் அணிவகுப்பிற்கு' ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சென்னையின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் அணிவகுப்பு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

ஆட்டோ வேணும் சார்.. 3 மாதத்தில் கோரிக்கையினை நிறைவேற்றிய ஆளுநர்!

மகளிர் தின நிகழ்வின் போது ஆட்டோ வழங்குமாறு பெண் ஒருவர் வைத்த கோரிக்கையினை 3 மாதத்தில் நிறைவேறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

விரைவில் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் பேட்டி

மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் சிறை தண்டனை.. தென்மண்டல NCB தலைவர் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: கடலோர ஊடுருவ முயன்ற ஒத்திகை வீரர்கள் உட்பட 13 கைது!

சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிப்பட்டனர்.

ரூ.3 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு.. 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த வழக்கில் 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலீசார் பிடியில் நடிகர் கிருஷ்ணா.. போதைப் பொருள் தொடர்பாக விடிய விடிய விசாரணை!

போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

7 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது.. பொதுமக்கள் நிம்மதி

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. அச்சத்தில் கல்வியாளர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.