"ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்"- முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.
தமிழகத்தில் வரும் 9-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், லயன் சபாரிக்காக விடப்பட்ட புதிய ஆண் சிங்கம் ஒன்று 2 நாட்களாக மாயமானது. பூங்கா ஊழியர்களின் தேடுதலுக்குப் பின், அந்தச் சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் லயன் சபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.
குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1980கள் மற்றும் 90களின் 31 முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நட்பைக் கொண்டாட நேற்று (அக். 4) சென்னையில் 'நட்சத்திர ரீயூனியனில்' ஒன்று கூடினர். சிரஞ்சீவி, சரத்குமார், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
காசாவில் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (அக். 5) மாலைக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். தவறினால் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அடி கிடைக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வேலாயுதபாளையம் போலீசார் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
"துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ் ஆகியோரின் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
"விஜய் எம்ஜிஆராக முடியாது; அரசியலில் பக்குவம் இல்லை" அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி. சேகர் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 3) ஒரே நாளில் சவரனுக்கு ₹880 வரை குறைந்து, ₹86,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.