K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=2950&order=created_at&category_id=3

திருவண்ணாமலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை..!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் நினைவு தினம்... மாசற்ற மனதுக்கும், தூய அன்புக்கும் சொந்தக்காரர் - மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி தகனம்..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் யமுனை நதிக்கரையில் குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கு நடைபெற்றது.

48வது சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்..!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 48வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மயிலாப்பூரில் இரும்பு சாரம் உடைந்து ஒருவர் காயம்.. 3 கார்கள் சேதம்..!

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வரக்கூடிய இடத்தில் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 3 கார்கள் சேதமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி  ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு..! 

சென்னை ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி  ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா.. சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சேவாக்..!

ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின்' இறுதி போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் கலந்து கொள்கிறார். 

ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முற்றுகை போராட்டம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருகிறது.. கோவி.செழியன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அற்புதமான மனிதர்.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை.. தாமாக முன் வந்து விசாரிக்கும் நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

சொன்னதை செய்த அண்ணாமலை.. சாட்டையால் அடித்து போராட்டம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டின் முன்பு நின்று சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. தமிழிசை உள்ளிட்ட 417 பேர் மீது வழக்குப்பதிவு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பாஜக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியவர் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் என்று அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

FIR லீக் ஆனது எப்படி..? - சென்னை கமிஷனர் அருண் விளக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி ரவுடிகளின் ராஜ்ஜியமாக தான் உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு..!

திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ரவுடிகளின் ராஜியமாக தான் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தத்தெடுக்க விண்ணப்பித்ததால் வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ரயில் கழிப்பிடத்தில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை, தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும், வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்

தமிழகத்தில் தொடர்ந்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சபதம் விடுத்துள்ளார். 

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் மத்திய மாநில இரு அரசுகளும் மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக அரசு நாடகம் ஆடுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஜினியை சந்தித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்.. என்னவா இருக்கும்?

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் குகேஷ், முன்னணி நடிகரான ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் நாடகமாடியது அம்பலம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகளை ஊக்குவிக்கும் ஸ்டாலின் அரசு.. சமூக விரோதிகளின் கூடாரம் திமுக- இபிஎஸ் கண்டனம்

சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் திமுக திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சென்னையில் வெடித்த போராட்டம்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்டு பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.