இலங்கை மண்ணில் முதல் பெரியார் சிலை - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேச்சு
இலங்கைக்கு பயணம் சென்றிருக்கும் சேலம் மாவட்டத்தை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆலோசனை கூட்டத்தில் பேசியது பரப்பானது.
இலங்கைக்கு பயணம் சென்றிருக்கும் சேலம் மாவட்டத்தை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆலோசனை கூட்டத்தில் பேசியது பரப்பானது.
இளம்பெண்களுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி, லட்சக்கணக்கில் பணம், நகை சுருட்டியதாக பாஜக பிரமுகரை, போலீஸார் தட்டித் தூக்கியுள்ளனர். யார் அந்த பாஜக பிரமுகர்? நடந்தது என்ன? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
Usilampatti Family Function : உசிலம்பட்டியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் தனித் தனியாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு விழாவை கொண்டாடியுள்ளது ஒரு குடும்பம். மூன்று தலைமுறையினர் இணையும் விழா என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் சுமார் 240 குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் அருகே இரவு வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி 15 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராஜபாளையம் அருகே கிராமத்து ஆண்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விடியவிடிய வழிபாடு நடத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று திருவிழாவை கொண்டாடினர்.
டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி அதனை அனைவரும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் பேசியுள்ளார்.
கட்டிய தாலியின் ஈரம் கூட காயாத நிலையில், நண்பர்களைப் பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையின் சிகிச்சைக்காக அஜித் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து நிதி திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் மகளை காப்பாற்றத் துடிக்கும் பெற்றோரின் அவலநிலை, பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரி, ஆணையத் தலைவர் கடிதம் அனுப்பி 22 மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரயில்வே அதிகாரிகள் கருணைத் தொகை 50 ஆயிரத்தை வழங்கினர்.
பழைய இரண்டாயிரம் ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
கோவை மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ பணியிடக்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் நிலையில் 82 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மேம்பாலத்தின் கீழ் காலாவதியான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து பயிருக்கு முறையான விலை நிர்ணயம் செய்யாத விற்பனை கூட நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நடந்த கொடுமையை தட்டிக்கேட்கச் சென்ற உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் நடந்து சென்ற பெண்ணை ஆட்டோவில் வைத்து கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், ஓடும் ரயிலில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது. ஏன் இந்த நிலை? பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?
யில் சிறுமியை ஆட்டோ டிரைவர் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த நபர் சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மலேசிய பெண்ணிற்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக தரையிறங்கியும் காப்பாற்ற முடியாமல் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் கடந்த 8 மாதங்களாக போராடி வரும் மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களை சந்திக்காமல் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வெடித்த பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளை குறிப்பிட்ட பகுதியில் இயக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.