தமிழ்நாடு சட்டப்பேரவையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சிக்கு எதிராக முதல்வர் விஜய் இன்று காலை சட்டப்பேரவையில் தனது முதல் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். மேகதாது அணைக்குத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் என எவ்வித அனுமதியும் மத்திய அரசு வழங்கக் கூடாது என்றும், காவிரி படுகையில் கர்நாடக அரசு எவ்வித நீர் தேக்கத்தையும் கட்டக் கூடாது என்று அம்மாநிலத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, மமக, கொமதேக, மஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது ஆதரவை வழங்கின.
அதிமுக, திமுக ஆதரவு
விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கோள்காட்டிப் பேசி தீர்மானத்திற்கு ஆதரவளித்தார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சிக் கால நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்போம் என்று உறுதியளித்தார். மேலும், இத்தீர்மானத்தில் ‘மேகதாது பிரச்சினைகளுக்காகத் தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய், அதனை நான்காவது அம்சமாகத் தீர்மானத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்குக் கோரிக்கை வைத்தார். இந்தத் திருத்தத்துடன் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், மேகதாதுக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியதாகப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

LIVE 24 X 7