தமிழ்நாடு

பைக் டாக்சிக்கு டாட்டா... உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

ஆட்டோ ஓட்டுனர்களின் மனம் குளிரும்படி மதுரை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பைக் டாக்சிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று போடபட்ட பொதுநல மனு. பைக் டாக்சி ஓட்டுவதற்கு தடை என ஒரே போடாக போட்ட மதுரை உயர் நீதிமன்றம்.

பைக் டாக்சிக்கு டாட்டா...  உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
Madurai Highcourt Bans Bike Taxi
ஆட்டோ ஓட்டுனர்களின் மனம் குளிரும்படி மதுரை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பைக் டாக்சிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று போடபட்ட பொதுநல மனு. பைக் டாக்சி ஓட்டுவதற்கு தடை என ஒரே போடாக போட்ட மதுரை உயர் நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நவீன்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கானது, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தரப்பு கூறுகையில் "பைக் டாக்சி குறித்து ஒரு குழு அமைத்து இந்த விவாகரத்தில் அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்கவேண்டி உள்ளது" என தெரிவித்தனர்.

'தமிழ்நாடு அரசு குழு ஒன்று அமைத்து, ஆட்டோ ஓட்டுனர்கள், பைக் டாக்சி ஓட்டுபவர்களின் குறை, நிறைகளை கேட்டறிந்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும், அந்த முடிவு எடுக்கப்படும வரை தமிழ்நாட்டில் பைக் டாக்சி ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. அதையும் மீறி இயக்கினால் பைக் டாக்சி ஓட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்' என்று மதுரை உயநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

பைக் டாக்சிக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் குறுக்கிட்ட நீதிபதிகள், பைக் டாக்சிக்கு தற்போது அனுமதி இல்லை என்றால் அதை ஏன் பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்தக்கூடாது. ஏதேனும் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பாளர்கள் ஆவர்? என்று கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில், மத்திய அரசு பைக் டாக்சிக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதனால், மத்திய அரசின் சட்டம் தான் செல்லும். எனவே தமிழ்நாடு அரசு பைக் டாக்சி ஓட்டுவதற்கு தடை விதிக்க முடியாது என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வு கூறியதாவது "தமிழ்நாடு அரசு பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குமா? இல்லையா? என்பது பற்றி விரைவில் ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்" என்றும் உரிய கொள்கை முடிவை எடுக்கும் வரை பைக் டாக்சிக்கு இடைக்கால தடை விதித்தது மட்டுமல்லாமல் தடையை மீறி பைக் டாக்சி ஓட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்" என்று கூறினர்.