தமிழ்நாடு

17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
Tamil Nadu Weather Update
தமிழ்நாடு கடலோர பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (02-09-2026) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் :

இன்று (02-09-2026) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலை நிலவரம் :

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது.

உள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகலாம். அதே நேரத்தில் கடலோர தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை முன்னறிவிப்பு :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (02-09-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் குறைந்தபட்ச வெப்பநிலை: 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று (02-09-2026) முதல் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.