தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளே இப்படியா..! தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

வாரத்தின் முதல் நாளே இப்படியா..! தங்கம் விலை மீண்டும் உயர்வு!
Gold Rate
சர்வதேசச் சந்தை மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல்களுக்கு ஏற்ப ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யட்டப்பட்டது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று (ஆகஸ்ட் 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,000-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளையில், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஒரே நிலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.

வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களை கவலையடைய செய்துள்ளது.