சென்னையில் சர்வதேச பொருளாதாரக் காரணிகளால் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இன்று (ஜூன் 18) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை கடுமையான விலை மாற்றங்களைக் கண்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்து ரூ. 1,12,560-க்கு விற்ற தங்கம், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 80-ம், நேற்று புதன்கிழமை சவரனுக்கு ரூ. 240-ம் குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,240 என்ற விலைக்கு விற்பனையானது. இந்தத் தொடர் சரிவு நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருந்த நிலையில், இன்று விலை மீண்டும் ஏறுமுகமாக மாறியுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று (ஜூன் 18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மீண்டும் ரூ. 1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 14,060 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
வெள்ளி விலை வீழ்ச்சி
தங்கத்தின் விலை இன்று உயர்ந்திருந்தாலும், வெள்ளியின் விலை நகைப் பிரியர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் பெருமளவு சரிந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 270-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை அதிரடியாக ரூ. 5,000 குறைந்து, சந்தையில் ரூ. 2.70 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7